FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 25, 2016, 09:17:35 PM
-
அரிசியை விட சத்து நிறைந்தது கம்பு
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-0/s480x480/13094217_1564813820482754_6494061941410020892_n.jpg?oh=db2e738bfacbe2bd8b4a9a3442d34359&oe=57B2EFBC)
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.