FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 25, 2016, 08:24:46 PM

Title: ~ கருப்பு உளுந்து களி ~
Post by: MysteRy on April 25, 2016, 08:24:46 PM
கருப்பு உளுந்து களி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fkaru-2.jpg&hash=de7ec479524063d63e1a220b12f39c5672aee756)

தேவையான பொருள்கள் :

பச்சரிசி – 1 கப்
கருப்பு உளுந்து – 1 கப்
கருப்பட்டி – 1 கப்
நல்லெண்ணெய் – 1 குழம்பு கரண்டி அளவு
தேங்காய் துருவல் – அரை கப்

செய்முறை :

* அரிசி, உளுந்து இரண்டையும் நைசாக அரைத்து கொள்ளவும்.
* கருப்பட்டியை தூளாக்கி, அரை கப் தண்ணி விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைக்கவும்
* அகலமான சட்டியில் மாவை கொட்டி அதனுடன் கருப்பட்டி தண்ணீர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் மேலும் 1கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு அந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டி விழாமல் நன்கு கைவிடாமல் கிளர வேண்டும்.
* தீயை மிதமாக வைத்து சிறிது சிறிதாக நல்லெண்ணெய் சேர்த்து அஞ்சு நிமிஷத்துக்கு கிளறவும்.
* மாவு திரண்டு அல்வா பதத்திற்கு வரும்போது இறக்கவும்.
* பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மாதவிடாய் காலத்தில் முதுகு வலி வராது. எலும்புக்கு மிகவும் நல்லது.