FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 25, 2016, 08:18:57 PM
-
குண்டூர் கோழி வேப்புடு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fvep-e1461427079298.jpg&hash=8a674055c15444691cf8ee6bad1ced5ecaf3f99d)
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 2௦ கிராம்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
கரிவேபில்லை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மல்லித்தூள் – ஒரு தேகரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி, பூண்டு விழுது – 15 கிராம்
அரிசி மாவு – ஒரு தேகரண்டி
மைதா – ஒரு தேகரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
சிக்கன் சுத்தம் செய்து இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மைதா, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஊறவைக்கவும்.
அரை மணிநேரம் நன்றாக ஊறவிடவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு, இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரிவேபில்லை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்த சிக்கனை குழம்பில் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.