FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2016, 07:52:13 PM
-
மிளகு மட்டன் கிரேவி
மட்டன் – 1 கி
வறுத்து பொடிக்க:
மிளகு – 4 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன் சோம்பு – 1 ஸ்பூன் பட்டை,கிராம்பு,ஏலம் – தேவையான அளவு
தாளிக்க:
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பூண்டு – 1 மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன் தனியாத்தூள் – 2 ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு ப.மிளகாய் – 2 கொத்தமல்லி தழை – சிறிதளவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fmutton-gravy-recipe-in-tamilmutton-gravy-samayal-e1444208579745.jpg&hash=806656cc475b25acaecbb59ac6a833b946d927b4)
செய்முறை:
மட்டனை நன்கு கழுவிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு இஞ்சி ,பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி, ப.மிளகாய், உப்பு கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், தனிய தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு மட்டன் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடிகளையும் போட்டு நன்றாக கிளறி விடவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவும். இது கிரேவியாக வரும்வரையில் சிம்மில் வைக்கவும்
கடைசியுல் கொத்தம்மல்லி சேர்த்து இறக்கி வைக்கவும்.
இப்பொழுது சுவையான மட்டன் கிரேவி ரெடி.