FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 24, 2016, 07:49:06 PM

Title: ~ பயன் தரும் வீட்டுக் குறிப்புகள். ~
Post by: MysteRy on April 24, 2016, 07:49:06 PM
பயன் தரும் வீட்டுக் குறிப்புகள்.

(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/13051675_1563761170588019_400748861358990229_n.jpg?oh=57ae49424a455a57c9abe67fc3d816b8&oe=57A1BE37)

பயன் தரும் வீட்டுக் குறிப்புகள். மொரு மொரு தோசை வேண்டுமா? தோசைக்கு மாவு அரைக்கும் போது அதில் ஒரு துண்டு உருளைக் கிழங்கையும் சேர்த்து அரைத்து வார்த்து பாருங்க. பொன்னிறமான மொரு மொரு தோசை கிடைக்கும். பருப்பில் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்தால் சீக்கிரத்தில் வெந்து விடும். வறுவல் செய்யும் கிழங்கு வகைகளை ஆவியில் வேகவைத்து செய்தால் அதிக மொரு மொறுப்பாகவும் எண்ணெயும் அதிகம் இழுக்காது. குக்கரில் கரை ஏற்படாமல் இருக்க அதில் எலுமிச்சை தோலை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து பிறகு பயன் படுத்தலாம். இஞ்சியை கழுவி அதன் தோலை நீக்கி விட்டு பிரீசரில் போட்டு வைத்தால் தேவைப்படும் போது துருவி அதை பயன்படுத்தலாம். வீட்டை துடைக்கும் தண்ணீரில் சிறிது மண்ணெணையை கலந்து துடைத்தால் ஈ எறும்பு வராது.மழைக் காலமானால் சீக்கிரத்தில் தரை உலர்ந்து விடும். கேக் செய்யும் போது அதில் சேர்க்கும் முட்டை வெண்ணெய் போன்ற பொருட்களை பிரிட்ஜியிலிருந்து எடுத்த உடனே சேர்க்கக் கூடாது சிறிது நேரம் வெளியில் வைத்துருந்து சாதாரண சீதோஷ்ண நிலைக்கு வந்த பிறகு சேர்க்க வேண்டும்.