FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2016, 02:58:56 PM
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fmil-e1461420641130.jpg&hash=b903208c956e04626ea962ba51ee8f401f187b28)
தேவையான பொருட்கள்:
மீன் 500 கிராம்
கறுப்பு மிளகு – 2 தே.க
மிளகாய் தூள் 2 தே.க
உப்பு –- தே.அளவு
இஞ்சி – 2 தே.க
பூண்டு – 2 தே.க
எலுமிச்சை சாறு –3 தே.க
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – தே.அளவு
அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க
தேங்காய் எண்ணெய் – தே.அளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அத்துடன் சிறிது அரிசி மாவும் சேர்க்கவும். பின்பு அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக பிசரி 15-–30 நிமிடம் ஊற விடவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடான பின்னர் மீன் துண்டுகளை போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும்.
இருபுறமும் நன்றாக வேகும் வரை வறுக்கவும். பின்பு சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் தயார்.