FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2016, 02:49:42 PM
-
கோங்கூரா பேபிகார்ன் ஃப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fggg-1.jpg&hash=444c40c32f7c401ad5173d614ff55eccf1377ea8)
தேவையான பொருட்கள்
பேபிகார்ன் – மூன்று (நீளவாக்கில் நறுக்கியது)
புளிச்ச (கோங்கூரா) கீரை – அரை கப்
பூண்டு – மூன்று பல்
காய்ந்த மிளகாய் – ஒன்று
மிளகு – அரை டீஸ்பூன்
ரொட்டி தூள் – கால் கப்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயை காய்ய வைத்து காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, பூண்டு, கோங்கூரா கீரை சேர்த்து வதக்கவும்.
பின், இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன், உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பேபிகார்னை நீளவாக்கில் நறுக்கி, அரைத்த விழுதை அதில் தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபிகார்னை பிரட் தூளில் புரட்டி, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான பேபிகார்ன் கோங்கூரா ஃப்ரை ரெடி.