FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 24, 2016, 09:28:52 AM

Title: ~ மீன் குழம்பு கேரளா ~
Post by: MysteRy on April 24, 2016, 09:28:52 AM
மீன் குழம்பு கேரளா

தேவையான பொருட்கள்

சின்ன மீன் – 1/2 கிலோ (தலை, வால் நீக்கியது )
சின்ன வெங்காயம் – 1/2 கப்(விருப்பமெனில்)
இஞ்சி – 1விரல் துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 4 – 5 பல்
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – 1 கோலி குண்டு அளவு (அ) மாங்காய் துண்டுகள் – 8 (அ ) குடம் புளி – 3 – 4
தேங்காய் அரைத்தது – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 – 3
கருவேப்பிலை – 1 கொத்து
 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fkerala-fish-curry-in-tamil-e1443765349399.jpg&hash=a0bfa3e209f6e5067b76cc231bf3ca652b4a6d9a)

செய்முறை

மீனை தலை, வால் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
மீனை குழம்பு செய்யும் பாத்திரத்தில் போட்டு, தேவையெனில் வெங்காயம் , பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், கருவேப்பிலை,இஞ்சி, பூண்டு அரைத்து சேர்த்து, சட்டியில்உருட்டினார் போல பிரட்டிக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி , அடுப்பில் வைத்து வேக விடவும்.
மீன் நன்கு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு

மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய்க்குப் பதில் அவரவர் விரும்பும் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.