FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 11:17:06 PM
-
மட்டன் வடை
தேவையான பொருட்கள்:
மட்டன் – 100 கிராம் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fmutton-vadai-recipe-tamilmutton-vadai-samayal-kurippucooking-tips-in-tamil-mutton-vadai.jpg&hash=f4aaaf76899d60b7f674fb217a13e80dd5584df9)
மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி!!!