FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 09:23:28 PM
-
முருங்கைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
வாட்டசாட்டமான முருங்கைக்காய் – இரண்டு
தக்காளி -1 பெரியது
வெங்காயம் – 1 பெரியது
கடுகு,உளுத்தம் பருப்பு தலா அரைடீஸ்பூன்
சீரகம்- அரை- 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -4
மல்லி,கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fmurungakkai-poriyaltamil-cooking-tips-in-tamil-murungakkai-poriyalmurungakkai-poriyal-samayal-kurippu.jpg&hash=15a2f46a3e800d394e6a6cc6430e4d5b4b072280)
செய்முறை:
மிள்காய் வற்றல்,சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் ,நம்ம செல்வி அக்கா சொன்ன மாதிரி வற்றல் குலுங்கினால் ஈசியாக பொடியாகிவிடும்.
குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி,முருங்கைக்காய் சேர்க்கவும்,பிரட்டவும்,பொடித்த சீரகம்,வற்றலை சேர்க்கவும்.
நன்றாக ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும்.
பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல்,தக்காளி,உப்பு சேர்க்கவும்,அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.
சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை ப்லைன் சாதத்திற்கு சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்