FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 09:15:13 PM
-
ஃப்ரைடு ப்ரான்ஸ் கறி
ஃப்ரைடு ப்ரான்ஸ் கறி தேவையான பொருட்கள்
இறால் – 1/2 கிலோ
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
தனியா பொடி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
கிராம்பு – 2
பட்டை – 1 துண்டு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
ஃப்ரைடு ப்ரான்ஸ் கறி செய்முறை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fprawn-fry-curry-recipe-in-tamil-prawn-fry-curry-seivathu-eppadi-how-to-make-prawn-fry-curry-tamil-e1445866198802.jpg&hash=c68ff5f17bd875b0d92bf2ab52e3648241728768)
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒடும், முதுகு நரம்பும் நீக்கி இறாலை சுத்தம் செய்யவும். பின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தனியா பொடி ஆகியவற்றைக் கலந்து இறாலில் பூசி ஊற விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் ஊற வைத்துள்ள இறாலையும் போட்டு நன்கு வதக்கவும். சிறிது நீர் தெளித்து ஒரு மூடி போட்டு மூடி வேக விடவும். நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தூவி சாதத்துடன் பரிமாறவும்.