FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 08:54:52 PM
-
முட்டை டெவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fde.jpg&hash=6b1696852c5dc53b03d6fe059ecf6f5fa2d23899)
அவித்த முட்டை – 4
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி
சில்லி கார்லிக் சாஸ்/ டொமேட்டோ சாஸ் – ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை தோலுரித்து பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். (பொரிக்கும் போது முட்டையில் ஈரமில்லாமல் பார்த்துக் கொள்ளவும்).
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், சில்லி ஃப்ளேக்ஸ், சாஸ் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். (சில்லி ஃப்ளேக்ஸுக்கு பதில் மிளகாய் தூளும் சேர்க்கலாம்).
அதனுடன் பொரித்த முட்டைகளைச் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான முட்டை டெவல் தயார். ஃப்ரைட் ரைஸ் முதல் தக்காளி சாதம் வரை அனைத்து வகையான சாதங்களுக்கும் ஏற்றது.