FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 08:24:04 PM

Title: ~ உப்புமா ~
Post by: MysteRy on April 23, 2016, 08:24:04 PM
உப்புமா

தேவையானவை :

ரவை – 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் – 1ல் பாதி
மிளகாய் – 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு – கொஞ்சம்

செய்முறை :

1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fupmaupma-recipe-in-tamilcooking-tips-in-tamilsamayal-kurippu-upmatamil-cooking-upma-recipe-e1445334460596.jpg&hash=79d313f629fc1ad105899fefc37033b3877638a7)

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.

குறிப்பு :

 ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும். பயந்துறாதீங்க. ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். அய்யோ பாவம்னு கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அப்புறம் இப்படி ஆகிரும். அனுபவம் உள்ளவன் சொல்றேன். கேட்டுக்கங்க.