FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 23, 2016, 07:49:24 PM
-
வெந்தயக்கீரை கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fvwe-e1458624789190.jpg&hash=e84384c7790db5d23585f546cadfe3a4845d3633)
தேவையான பொருட்கள்:-
வெந்தயக்கீரை – 2 கட்டு
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
பயத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 4
உப்பு – அரை தேக்கரண்டி
தக்காளி – பாதி
கடுகு, – கால் தேக்கரண்டி
செய்முறை:-
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
5 நிமிடம் கழித்து கீரை வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு 3 நிமிடம் கழித்து வேக வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து கிளறி விட்டு கொதிக்க விடவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தாளித்தவற்றை கொதிக்கும் கூட்டில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
சுவையான வெந்தயக்கீரை கூட்டு தயார்.