FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 22, 2016, 01:54:52 PM
-
பொடி மீன் வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fcd-2.jpg&hash=3eebb257af9bf4c83805fbee328c71f183e4238d)
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
ஓமம் – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது)
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்
சோல மாவு – 25 கிராம்
அரிசி மாவு – 25 கிராம்
முட்டை வெள்ளை கருவு – அரை முட்டை
செய்முறை
ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கரிவேபில்லை, பூண்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் சோல மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கருவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின், குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உதிரிஉதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.