FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 22, 2016, 11:00:05 AM
-
எளிமையாக செய்யக்கூடிய கேரட் அல்வா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fkar-1-e1461165881154.jpg&hash=400faccc9aab85ca1b183b1da8ebf3cbecb1a873)
தேவையான பொருட்கள் :
கேரட் – 1 கிலோ
சர்க்கரை – 500 கிராம்
பால் – 200 மில்லி
நெய் – 100 கிராம்
ஊறவைத்து தோல்நீக்கப்பட்டு வெட்டப்பட்ட பாதாம் – 20 கிராம் அலங்கரிப்பதற்காக
செய்முறை :
* கேரட்டை தோல் சீவி நன்றாக துருவி கொள்ளவும்.
* துருவிய கேரட்டை கொடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதியெடுத்து 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
* ஒரு கடாயினை சூடேற்றி, நெய் விடவும்.
* அடுத்து அதில் வேகவைத்து கேரட், சர்க்கரை மற்றும் மீதமுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறவும்.
* நன்றாக சுருண்டு அல்வா பதம் வந்ததும் பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரித்து இறக்கவும்.
* சுவையான கேரட் அல்வா ரெடி.