FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 22, 2016, 10:04:57 AM
-
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2F3244_fiery-black-pepper-chicken.jpg&hash=59b3d9b75c4152888c1d4ac0379e4f79a82f8486)
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
தாளிக்க :
எண்ணெய் – 2 மேஜை கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
கருவேப்பில்லை – 5 இலை
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
உப்பு – 2 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க வேண்டியவை :
மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி + தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
இதனை 10 – 15 நிமிடம் தட்டு போட்டு முடி வேகவிடவும். இதில் இருந்து தண்ணீர் தன்மை எல்லாம் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். (எண்ணெய் பிரிந்து வந்த பிறகு தான் சிக்கனை சேர்க்க வேண்டும்.அது தான் சரியான பதம் இந்த செய்முறையில்.)
எண்ணெய் பிரிந்து வந்த பின் சிக்கனை அதில் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தட்டு போட்டு முடி 5 – 8நிமிடம் வேகவிடவும்.
கடைசியில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி 1 நிமிடம் வேகவிடவும்.
இப்பொழுது சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.