FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 22, 2016, 09:55:48 AM
-
கம்பு ராகி மேத்தி சப்பாத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Frot.jpg&hash=869fde885933d16495ab401cfe6a83e648694a17)
தேவையான பொருட்கள் :
கம்பு மாவு – அரை கப்
கேழ்வரகு மாவு – கால் கப்
கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – ருசிக்கேற்ப
வெந்தயக் கீரை – 2 கட்டு
செய்முறை:
* வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அனைத்து மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* சப்பாத்தி மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
* கம்பு ராகி மேத்தி சப்பாத்தி ரெடி.