FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 21, 2016, 08:01:37 PM

Title: ~ சுட்ட கத்தரிக்காய் சம்பல் ~
Post by: MysteRy on April 21, 2016, 08:01:37 PM
சுட்ட கத்தரிக்காய் சம்பல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fkatharikai-sambal-samayal-kurippu-in-tamilkatharikai-sambal-recipe-tamilkatharikai-sambal-seivathu-eppdaijaffna-samayal.jpg&hash=2679f8597c42513d6d17f32dcfdfdd7f4bfd5499)

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்-1
தக்காளி-2
வெங்காயம்-3
பச்சைமிளகாய்-1
கேரட், வெள்ளரிக்காய்- விரும்பினால்
உப்பு-தேவைக்கு

நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்)

ஆறியதும் தோல் நீக்கி பிசைந்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.

சுட்டகத்திரிக்காய் சம்பல் தயார்.
இதிலேயே நிறைய வகை உள்ளன. கருவாட்டை சுட்டு முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல் :-) கத்தரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல் :-) கத்தரிக்காயும் தக்காளியும் சுட அலுப்பா இருக்கா??? புளியை கெட்டியாக கரைத்து 3 ஸ்பூன் வெங்காயத்துடன் சேருங்கள்…. வெங்காய சம்பல் தயார் :-))) உடனடி சைட் டிஷ் ரெடி…