FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 21, 2016, 07:38:14 PM
-
என்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்
பெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர்கள் மத்தியில் வசீகரிக்கும் தோற்றத்துடன் வலம்வரவேண்டும் என்றே கருதுகிறார்கள்.
இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று கஷ்டப்படத் தேவையில்லை, வீட்டிலேயே எளிய முறைகளின் மூலம் அழகாக தோற்றமளிக்கலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Firt.jpg&hash=9a4dc2853ee64d1b9ad907bc6b970b74f5b0df6d)
* 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.
20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் பொலிவாகவும் இருக்கும்.
* நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
15 நிமிடம் கழித்து கழுவினால் முதுமைக் கோடுகள் மறைந்து மென்மையாக இருக்கும்.
* 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.
15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுருக்கங்கள் மறைந்து விடும்.