FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 21, 2016, 01:51:00 PM

Title: ~ வெள்ளைப் பணியாரம் !!! ~
Post by: MysteRy on April 21, 2016, 01:51:00 PM
வெள்ளைப் பணியாரம் !!!

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/13012745_958482650932932_4181549153064510366_n.jpg?oh=0b8ed59e6845ff32242a17e40cbbe013&oe=5777FE7A)

தேவை?

பணியாரப் பச்சை (பச்சரிசி) - தலை தட்டி 2 ஆழாக்கு,
வெள்ளை உளுத்தம் பருப்பு - அரிசியின் மேல் கோபுரமாக (தோராயமாக) - 1/4 ஆழாக்கு,
உப்பு - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதை நன்கு மையாக அரைத்து, உப்புச் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த் துவையல் (அ) கதம்பச் சட்னி (அ) வெங்காயம்-தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும். அரை டீஸ்பூன் சர்க்கரையும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும். விருப்பமிருந்தால் சேர்க்கலாம்.

பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக, கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவைச் சேர்க்கவும். ஒவ்வொரு பண்டிகை தினத்தன்றும் திருமணங்களிலும் இது இடம் பெறும்.