FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 21, 2016, 11:31:15 AM

Title: ~ முந்திரி கொத்து ~
Post by: MysteRy on April 21, 2016, 11:31:15 AM
முந்திரி கொத்து

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Ffbhf.jpg&hash=f4820ed66b99a1376be7b0aadc0f79c43e743cc7)

தேவையான பொருட்கள்;

பச்சைப் பயறு-250 கிராம்;
துருவிய தேங்காய்ப் பூ-1 கப்;
ஏலக்காய்- 3 பற்கள் ( தட்டி வைத்தது);
வெல்லம்-200 கிராம்;
பொறிக்கத் தேவையான எண்ணெய்;
பச்சரிசி மாவு-1 கப்; உப்பு-1/2 ஸ்பூன்;
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்; தண்ணீர்-1 கப்.

செய்முறை:

பச்சைப் பயறை ஒரு வாணலியில் போட்டு, இளம் தீயில் கோல்டன் ப்ரௌன் கலர் வரும் வரை வறுகக்வும்.
துருவிய தேங்காயையும் அதேபோல் கரும் ப்ரௌன் கலர் வரும் வரை வறுக்கவும்.
பச்சைப் பயறை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெல்லத்தைப் பாகாக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சைப் பயறு மாவு, வறுத்த தேங்காய்ப் பூ மற்றும் ஏலக்காய் போட்டு, சூடான வெல்லப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
இந்த உருண்டைகளை ஒரு காட்டன் துணியால் மூடி, 5 நிமிடம் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். உருண்டைகளை அரிசிமாவுக் கலவையில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொறிக்கவும். எல்லா பக்கமும் வேகுமாறு புரட்டிப்போட்டு வெந்ததும் எடுத்து வைத்து வைக்கவும். உருண்டை பிடிக்கும்போது முந்திரி சேர்த்துப் பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.