FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 20, 2016, 08:31:47 PM

Title: கண்ணீர் அஞ்சலி
Post by: thamilan on April 20, 2016, 08:31:47 PM
பெண்ணே
உன்னுள் ஒரு இதயம்
இதமாய் இளைப்பாறும்போது
ஏனடி
என் இதயத்துக்கு
தாலட்டுப் பாடினாய்

உன் துரோக தாலாட்டில்
என் இதயம் உறங்கவில்லையடி
உயிரற்றுப் போனது

உன் மனம் வறண்ட பாலைவனம்
என்றறிந்ததும்
காதல் விதை தூவி காத்திருந்தேன்
எப்போதாவது......
எப்போதாவது .....
உன் மனம் பாலைவனச்சோலையாய்
மாறுமென்று காத்திருந்தேன்

உன் மனம்
பாலைவனச் சோலையை கண்டிராத
சகாரா பாலைவனம் என்று
இன்று தானடி கண்டுகொண்டேன்

நானோ சோகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
ஒவ்வொருநாளும் கண்ணீருடன் .......
உதயம் போன்று
உன்முகம் மட்டும் அழகாக
அகம் மட்டும் ஏன் அமாவாசையாக ........

உன்  விழியை
வாள் வேல் என்று வர்ணித்தேன்
என்னை காயப்படுத்த
நீ உபயோகிக்கப் போகும் ஆயுதங்கள்
அவை என அறியாமல்
விஷமக்காரி
நீ விழிகளில் விஷம் வைத்தல்லவா
என் மேல் வீசினாய்

என் இதயத்தை
இதமாக வாசித்துக் கொண்டே
ஏனடி என்னை சிலுவையில் அறைந்தாய்
என்னை வருடிய மயில் இறகால்
ஏனடி என் கண்களை குருடாக்கினாய்

கண்ணீர் நிரப்பப்பட்ட 
எனது பேனாவின் அழுகுரல்
உன் காதுகளுக்கு மட்டும்
ஏனடி கேட்காமல் போன து
செவிடரிடம்  கதை சொல்லி
ஊமையரிடம் விமரிசனம் கேட்டவன் போலவே
உன்னிடம் காதலை சொல்லி
கண்ணீருடன் நான்

நம்  காதல் வாழ்கையில்
கடைசி அத்தியாயம்
என் கல்லறையில் முடியப் போகிறது
அங்கேயும்
உன் கண்ணீர் அஞ்சலி ஒன்றுக்காகவே
காத்திருப்பேன்