FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 19, 2016, 10:03:07 PM
-
பலா பின்ஜி பொடிமாஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fpala.jpg&hash=b6edc4857d6e60975a25d386765fe02eba0f1805)
தேவையான பொருட்கள்
பலா பின்ஜி – இரண்டு கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவைகேற்ப
கடுகு – கால் டீஸ்பூன்
உ.பருப்பு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
வெங்காயம் – இரண்டு(நறுக்கியது)
பச்சை மிளகாய் – ஒன்று(நறுக்கியது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலா பிஞ்சுடன் மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.தண்ணீர் வடித்து பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி பலா பின்ஜி பொடி செய்ததை போட்டு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இரகவும்.
சுவையான பலா பின்ஜி பொடிமாஸ் தயார்.