FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 19, 2016, 08:40:22 PM
-
அவல் – கல்கண்டு பொங்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F1.jpg&hash=e83e6b7db9396766570a68a3bd1eda1c83320f37)
தேவையானவை:
அவல் – 2 கப், கல்கண்டு – ஒரு கப், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 6 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
செய்முறை:
அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். கல்-கண்டை பெரிய ரவையாக பொடித்து, வெந்த அவலுடன் சேர்க்கவும். மீதியுள்ள நெய்யையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.
-
அவல் கேசரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F2.jpg&hash=24fb6329d6924870b2e7fe64b029c5d126eef4c3)
தேவையானவை:
அவல் – 2 கப், சர்க்கரை – ஒரு கப், கேசரி பவுடர் – 2 சிட்டிகை, முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் ‘கமகம’ அவல் கேசரி ரெடி!
-
அவல் லட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F3.jpg&hash=2ac26e4a277d44b60009ce3b1dda7c7c6aa39808)
தேவையானவை:
அவல் – 3 கப், சர்க்கரை – ஒரு கப், முந்திரி, திராட்சை – ஒரு கைப்பிடி, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – முக்கால் கப்.
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் அவலை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த அவலுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை சூடாக்கி இந்தக் கலவையில் சேர்த்துக் கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
-
அவல் மோர்க்கூழ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F4.jpg&hash=9677da3879991b46a55052215658bdbc57cb1029)
தேவையானவை:
அவல் – 2 கப், லேசாக புளித்த கெட்டி மோர் – ஒரு கப், பச்சைமிளகாய் – 4, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 6 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடிக்கவும். அவலுடன் மோர் மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி, (மாவு தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும்) உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகும்வரை அடிக்கடி கிளறவும். கூழ் ஒட்டாமல் வந்ததும் சிறிது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.
-
அவல் பாயசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F5.jpg&hash=0c8fecad5700c22148bbf7b08ddf6bf97a5b57c5)
தேவையானவை:
அவல் – ஒரு கப், சர்க்கரை – முக்கால் கப், பால் – அரை கப், முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
அவல், முந்திரியை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த அவலை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதனுடன் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவை மிகுந்த இந்தப் பாயசத்தை நிமிடங்களில் செய்து விடலாம். அபாரமாக இருக்கும்.
-
அவல் புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F6.jpg&hash=1a54a10ca7584ee6f0826dfd4ec4da15acb479b9)
தேவையானவை:
அவல் – ஒரு கப், பொடித்த வெல்லம் – கால் கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
அவலை நெய் விட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், வெல்லப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒருமுறை சுற்றி எடுக்கவும்.
இது புட்டு போன்று பொலபொலவென்று இருக்கும். விருப்பப்பட்டால் பாதாம், முந்திரி சேர்த்தும் பரிமாறலாம்.
-
அவல் – தேங்காய்ப்பால் பாயசம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F7.jpg&hash=1c83b9a6b673476c45eee11ea24dd4a82181cc50)
தேவையானவை:
அவல் – ஒரு கப், தேங்காய் – ஒன்று, வெல்லம் – முக்கால் கப், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
அவல், முந்திரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். தேங்காயைத் துருவி இரண்டு விதமாக பால் எடுக்கவும். அவலை, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலில் சேர்த்து வேக விடவும்.
அவல் வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
-
அவல் உப்புமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F8.jpg&hash=a600e25987710c90ec04eee27af324a2d248d24f)
தேவையானவை:
அவல் – 2 கப், வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு, அதில் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். பரிமாறும்போது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
-
அவல் பொரி உருண்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F9.jpg&hash=f4ad9687155efb11d79cc388eb0d10b8b3be92c9)
தேவையானவை:
அவல் பொரி – 3 கப், வெல்லத்தூள் – ஒரு கப், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, பொட்டுக்கடலை – தலா ஒரு கைப்பிடி.
செய்முறை:
முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையை பாகில் கொட்டிக் கிளறி, உருண்டை பிடிக்கவும். மாலை நேரத்துக்கேற்ற மொறு மொறுப்பான ஸ்நாக்ஸ் இது!
-
அவல் – வெஜ் உப்புமா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F10.jpg&hash=90c58b6f73cae15897a0fd3ff3c5da24e02f0d9e)
தேவையானவை:
அவல் – 2 கப், கேரட், உருளைக்கிழங்கு – தலா 1, பச்சைபட்டாணி – ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் – 4, கடுகு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 5 டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை – அரை கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். மணத்தில் மட்டுமல்ல.. சுவையிலும் அசத்தும் இந்த உப்புமா!
-
அவல் – வெஜ் பிரியாணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F11.jpg&hash=ca23203eb0a1ac112c7f4488a17105034e661d75)
தேவையானவை:
அவல் – 2 கப், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கேரட், பீட்ரூட் – தலா 1, காலிஃப்ளவர் – ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு, கசகசா – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, எண்ணெய் – 6 டீஸ்பூன்.
செய்முறை:
தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, காய்களை மெல்லிய நீள துண்டுகளாக நறுக்கவும். அவலை தண்ணீரில் கழுவி, நீரை வடித்து விடவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கசகசா தாளித்து பட்டை, இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
காய்கள் வெந்ததும் அவலை உதிர்த்து சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். விரும்பினால் பிரெட் துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் இதனுடன் சேர்க்கலாம்.
-
அவல் பொங்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F12.jpg&hash=7edcddfa5f27f5254e1266cc0de6ffe6583cff98)
தேவையானவை:
அவல், பயத்தம்பருப்பு – தலா ஒரு கப், மிளகு – ஒன்றரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, நெய் – அரை கப், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பயத்தம்பருப்பை வேக விடவும். பருப்பு வெந்ததும் அவலை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியானதும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கடாயில் நெய்யை ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து, முந்திரி இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, அதை அவல் பொங்கலில் கொட்டிக் கிளறவும். இதைச் செய்வது சுலபம்.. ருசியும் அபாரம்!
-
கறிவேப்பிலை பொடி அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F13.jpg&hash=e92ffd62521d825e38ee3a5ec09bd9f20a020b07)
தேவையானவை:
அவல் – 2 கப், கறிவேப்பிலை – 2 கைப்பிடி, உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு – 2 கைப்பிடி, மிளகு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்பு வகைகள், மிளகு மற்றும் மிளகாயை எண்ணெயில் வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தால் கறிவேப்பிலை பொடி தயார்!
அவலை கழுவி, நீரை வடித்து ஒரு நிமிடம் ஊற விடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதனுடன் ருசிக்கேற்ப கறிவேப்பிலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
-
மோர் அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F14.jpg&hash=1e0970448cc1ba869b021531292a0f8ff40079ec)
தேவையானவை:
அவல் – 2 கப், கெட்டியான மோர் – முக்கால் கப், பெருங் காயத்தூள் – 2 சிட்டிகை, பச்சைமிளகாய் – 4, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு, கடலைப்-பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை கழுவி, தண்ணீரை வடித்து, கெட்டி மோரில் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். ஐந்து நிமிடம் ஊறினால் போதும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, அதில் பச்சைமிளகாயை போடவும். ஊற வைத்து உதிர்த்த அவல், பெருங்காயத்தூள் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
-
புதினா பொடி அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F15.jpg&hash=499bacce7c7eef6fbed2399ffdebc2de909047ae)
தேவையானவை:
அவல் – 2 கப், புதினா – ஒரு கட்டு, (இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்யவும்), உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புதினாவை நிழலில் உலர்த்தி, கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். அவலை தவிர மற்ற எல்லாவற்றையும் புதினா வுடன் சேர்த்து, தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
அவலை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அவலை ஒரு நிமிடம் வதக்கி, புதினா பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
-
புளி அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F16.jpg&hash=1528829ffa977fa79d97930137474ee39b7c1945)
தேவையானவை:
அவல் – 2 கப், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 4 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி, கெட்டியாகக் கரைத்த புளிக்கரைசலில் ஊற விடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளை தாளித்து, ஊற வைத்த அவலை உதிர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
-
தேங்காய்ப்பொடி அவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F17.jpg&hash=6f4fdaa751333bc364a47db366324933eabbe457)
தேவையானவை:
அவல் – 2 கப், தேங்காய் – ஒரு மூடி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 6, எண்ணெய் – 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். தேங்காயை துருவி, கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். அவலை நன்றாக கழுவி, தன்ணீரை வடித்து, 2 நிமிடம் ஊற விடவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, ஊறிய அவலை உதிர்த்து போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சுவைக்கேற்ப பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
-
அவல் அடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F18.jpg&hash=28a12b371c23311436f1b3e71ada0b671316332b)
தேவையானவை:
அவல் – 2 கப், மோர் – ஒரு கப், பச்சைமிளகாய் – 6, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். கெட்டி மோரில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஊறிய அவலை சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் மாவை அடையாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
-
அவல் போண்டா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F19.jpg&hash=d7d1d074a0ea858fe18f139830830f1a5153cbf6)
தேவையானவை:
அவல் – 2 கப், உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் – 6, இஞ்சி – சிறிய துண்டு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை உருளை – அவல் கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு மசித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
கடலைமாவுடன் அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
-
அவல் ஃப்ரூட் சாலட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F20.jpg&hash=7a91e17566137dd1a0673e66af021ad016af26ca)
தேவையானவை:
அவல் – 2 கப், ஆப்பிள் – பாதியளவு, ஆரஞ்சு – 10 சுளைகள், பச்சை திராட்சை – ஒரு கைப்பிடி, பப்பாளி – ஒரு துண்டு, வாழைப்பழம் – ஒன்று, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் – 10, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
பழங்களில் கொட்டை, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து பழக்கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு கலந்தால் அவல் ஃப்ரூட் சாலட் தயார்!
உடனடி புத்துணர்வு தரும் இந்த சாலட்டை விரைவாக செய்து அசத்தலாம்.
-
அவல் – ஜவ்வரிசி மில்க் அல்வா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F21.jpg&hash=de86f1f59770106289cbb5deb805a8ea871e19e8)
தேவையானவை:
அவல் – ஒரு கப், ஜவ்வரிசி – ஒரு கப், மில்க்மெய்டு – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – கால் கப், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, பால் – ஒரு கப், முந்திரி, பாதாம் – தலா ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வெறும் கடாயில் ஜவ்வரிசியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த ஜவ்வரிசியில் கால் பங்கை எடுத்து தனியாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு அவலை நன்றாக வறுத்துக் கொள்ள வும். பிறகு வறுத்த ஜவ்வரிசி, பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை சேர்த்து, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த ஜவ்வரிசியை போடவும். பிறகு மில்க்மெய்டை சேர்த்து, எல்லாம் கெட்டியாக சேர்ந்து வந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி இறக்கவும். முந்திரி, பாதாம் துண்டுகளை மேலே தூவி அலங்கரிக்கவும்.
-
அவல் கார புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F22.jpg&hash=25f2b540215ec870330a9cea87e45d7789ca2956)
தேவையானவை:
அவல் – 2 கப், தேங்காய் துருவல் – 2 கைப்பிடி, பச்சைமிளகாய் – 4, எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தேங்காயை பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் கீறிய பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து உதிர்த்த அவலையும் சேர்க்கவும். கடுகை தாளித்துக் கொட்டி, நன்றாக கிளறவும்.
-
அவல் மிக்சர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F23.jpg&hash=c3deb50573ab9cb72ae55371feb0aff4af2ec8f0)
தேவையானவை:
அவல் – 3 கப், வேர்க்கடலை, பொட்டுக் கடலை – தலா அரை கப், முந்திரி, திராட்சை – தலா ஒரு கப், கறிவேப்பிலை – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.
-
அவல் – பயறு சாலட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F24.jpg&hash=8330e933d81ce78ac5be56f4fca688d51fad140b)
தேவையானவை:
அவல் – 2 கப், தோல் நீக்கிய பாசிப்பருப்பு, தோல் நீக்காத பச்சை பயறு – தலா ஒரு கப், பச்சைமிளகாய் – 4, எலுமிச்சை – அரை மூடி, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பயறு வகைகளை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்து விடவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஊறவைத்த பயறு வகைகளுடன் சேர்க்கவும். உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
-
அவல் – உருளை கொழுக்கட்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F25.jpg&hash=2a88e553df0a09246d42af2b2a9afc4f8850cf6c)
தேவையானவை:
அவல் – 2 கப், உருளைக்கிழங்கு – 3, கறிவேப்பிலை, கொத்த மல்லி – ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, உப்பு – தேவை யான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும். பிறகு அவலை உதிர்த்து உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
மாவை சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கரில் (வெயிட் போடாமல்) ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
-
அவல் உசிலி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F26.jpg&hash=84be214250278faca4b2c39385df396df12bb034)
தேவையானவை:
அவல் – 2 கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரை கப், காய்ந்த மிளகாய் – 4, கடுகு – ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக வடைமாவு பதத்தில் அரைக்கவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அதில் அரைத்த பருப்பு விழுது, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும் ஊறிய அவலை உதிர்த்து சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். உதிர் உதிரான அவல் உசிலி தயார்!
-
அவல் வடகம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F27.jpg&hash=9f899d9bbee47017e0f16afb5be6b0e2a55c1a7d)
தேவையானவை:
அவல் – 3 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 10, கறிவேப்பிலை, கொத்தமல்லி – 2 கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஊறிய பருப்புடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். ஊறிய அவலை உளுந்துமாவுடன் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். அதை சிறு வடகமாக உருட்டி, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளலாம்.
இது, வெங்காய போண்டா போல் வாசனையோடும் ருசியோடும் இருக்கும்!
-
அவல் வடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F28.jpg&hash=56568669cc53b138e5086d65b072dd6dbb570f13)
தேவையானவை:
அவல் – 2 கப், உருளைக்கிழங்கு – 2, பச்சைமிளகாய் – 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, இஞ்சி – ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.
ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
-
அவல் – வெஜ் சாலட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F29.jpg&hash=e06ba91cbad57dcaa5e5f0c21e39ff371cdc2d75)
தேவையானவை:
அவல் – 2 கப், கேரட், தக்காளி, வெங்காயம் – தலா 1, சிறிய வெள்ளரிக்காய் – 1, பச்சைமிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி.
செய்முறை:
அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை தோல் நீக்க வேண்டியவற்றை நீக்கி, பொடியாக நறுக்கவும்.
பிறகு அவற்றுடன் உப்பு, எலுமிச்சம்பழ சாறு, உதிர்த்த அவலை சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.
-
அவல் இட்லி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fnasrullah.in%2Fta%2F30-30%2Faval%2F30.jpg&hash=2f838610e8ac315db29eb6e09611da5554731c3f)
தேவையானவை:
அவல் – 2 கப், கெட்டி தயிர் – ஒரு கப், பச்சைமிளகாய் – 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி கேரட் துருவல் – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அவலை கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடத்துக்கு பிறகு அவலை உதிர்த்து தயிருடன் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, கீறிய பச்சைமிளகாயைப் போட்டு, கேரட் துருவல், உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி குக்கரில் வெயிட் போடாமல் வேக விட்டு எடுக்கவும்.
இந்த இட்லி பூ போல மிருதுவாகவும் பார்க்க கலர்ஃபுல்லாகவும் இருக்கும்.