ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 098
இந்த களத்தின்இந்த நிழல் படம் Kanmani அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F098.jpg&hash=cfc93c65008a2a96b9f21d5fd0147ad9b85232d6)
இரு வேறு கருவறையில்
சில வருட வித்தியாசத்தில்
பிறந்து ஒன்றாய் வளர்ந்தோம் ..
என் உடன் பிறந்தவர்
மூவர் இருந்தும் என்னுடனே
பாசம் காட்டி பால்ய
பருவம் கடந்தோம் ...
ஒரு விடுமுறை வேளையில்
நாம் இருவரும் சேர்ந்து
மரக்கண் ஒன்றை
நட்டுவைத்து நீருற்றி வந்தோம் .......
மரத்தோடு சேர்ந்து நாமும்
வளரத்தொடங்கினோம்
உனக்குள் நானும் எனக்குள்நீயும்
கள்ளம் அறியாமல்
உள்ளத்தை பரிமாரிக்கொண்டோம் ...
நட்டுவைத்த மரம் பூக்க
துவங்கிய வேளையில்
நம் அன்பை புரிய வைத்து
உன் பெற்றோரிடம் பாடாத
பாடு பட்டு சம்மதம்
வாங்கி இல்லறத்தில் இணைந்தோம்...
ஆஸ்திக்கு ஒன்றுமாய்
ஆசைக்கு ஒன்றுமாய்
சந்தோஷத்தின் உச்சியில் இனித்த
நம் வாழ்வை போலவே வெகுவாய் காய்த்து
பலன் கொடுக்க துவங்கியது நாம் நட்ட மரமும்...
பிள்ளைகளை நன்கு வளர்த்து
ஆளாக்கி நம் வயோதிகத்தை
அதே காதலோடு வாழலாம்
என்ற என் ஆசையில் தீயிட்டு கொளுத்தி
என்னை துன்ப கடலில் நீந்த விட்டு சென்றாயே ...
உன் சுவாசம் இன்றி தவிப்பது நாம் மட்டும் அல்ல
நாம் வளர்த்த மரமும் தான்!
நீ இல்லாத உலகத்தில் என்னால் முடிந்த வரை
தனித்து பிள்ளைகளை ஆளாக்கி
நம் கடமையை முடித்துவிட்டேன் ...
உன் காதலின்றி இனியும் என்னால்
ஜீவிக்க இயலாது என்று உன்னோடு துயில் கொள்ள
நான் வந்த பிறகு பட்டு போனதடி
நாம் வளர்த்த மரமும்....