FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on April 14, 2016, 04:50:27 PM
-
ஆங்கிலப்புத்தாண்டுக்கு
அடைமழை வாழ்த்து
அருந்தமிழ் ஆண்டோ
அமைதியில் பூக்குது
என் ஏர் சுமந்த ஏழைக்கு
எட்டாத உன் வாழ்த்து
ஏட்டில்கூட ஏறாது!
குருதி குணமாறாது!
எத்தனை கிராமங்கள்
நாளை விருந்துக்கு
அழைக்கும் புத்தாண்டை
காலத்து மாற்றத்தில்
கடவுளுக்கும் பங்குண்டோ?
படித்தவர் படைப்பது
பாக்கெட் பலகாரம்
நீர் பெருகி
நிலம் நனைத்து
பாரெங்கும்
பயிர் பெருக
திரை திறக்கபோகும்
சித்திரை முதல் நாள்
வாழ்த்துகள்
...சக்தி ராகவா