FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 13, 2016, 05:30:00 PM
-
அதுசரி..
உனக்கென்ன
பௌர்னமி முழு நிலவதுவும்
தன் முழு அழகையும் திரட்டி
கடலினில் பிம்பமாய் மாற்றி
கண்காட்சி காட்டி உன் ஆட்சியை
குலைத்திட முனைகையில்
என் கையோடு கைசேர்த்து
தோளோடு சாய்ந்தவண்ணம்
காலாற கடற்கரையினில்
கடுந்தூரம் நடக்கவேண்டும்
கதைகதையாய் பல பேசி
தேசஎல்லை கடக்கவேண்டும்
காதலோடென என் காதோரம்
கதைத்துவிட்டாய் ...
இனி உள்ளழுது உப்புக்கரித்து
உப்பின் உற்பத்திக்கு
உறுதுணை புரியப்போவதில்லையென
அலைகளின் ஆர்பரிக்கும்
ஒப்புதலினோடு
மனு செய்திடப்போவதாய்
முனுமுனுக்கிறதே கடல் ....
-
பௌர்ணமி நிலவில் கடலலைகள் ஆர்ப்பரிக்கும் என்பதை அழகான
கூறிய உங்கள் வரிகளுக்கு வாழ்த்துக்கள்
-
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
-
:) nice
-
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!