FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on April 11, 2016, 07:54:53 PM
-
பனித்துளியில் குளித்த சிவப்பு ரோஜா
அவள் ஒற்றை ஜடையில் இருக்கை கொள்ள
மனம் முழுதும் அவன் நினைவுகள்
பனிமழை போல் உறைந்துவிட
இரு விழியும் ஒரு நோக்கில் வழி மேல் பள்ளிகொள்ள
தஞ்சமென நின்றிருந்த தெருமுனையோ
நிழல்களை விரட்டிவிட்டு இருள் கவ்வித் துயில்கொள்ள
பேதையவள் பெருமூச்சு விம்மலுடன் வெளியேறி
கருங்குவளை மலர்களென வீற்றிருந்த கருவிழிகள்
சிந்திய நீர்த்திவலை தாரையென வழிந்தோடி
பலகாலம் தவம்கிடந்த காதல் விதைகளை
அடித்துச் சென்றதுவோ !!!