FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பவித்ரா on April 09, 2016, 05:51:08 PM

Title: பவியின் கிறுக்கல்கள்
Post by: பவித்ரா on April 09, 2016, 05:51:08 PM

பவியின் கிறுக்கல்கள்

தலை கவிழ்ந்து என் கைகளை,
கொண்டு காதை  இறுக மூடிக்கொண்டு
கண் திறவாமல் பயத்தில் உறைந்த நிலையில்
நான் இருக்க .அலறுகிறான் ராம் ....

பவிமா பேய் வந்துடுச்சி 
ஆட்டம் ஆடும் போது எக்காரணம்
கொண்டும் கை எடுத்து விடாதே ராம்
அரற்றுகிறான் உசேன் ..

ஒற்றை கண்ணை மூடி ஒற்றை கண்ணால்
பெண் பேய் வருமா என்ற பீதியில்
அவர்களின் அருகே பேட்மண் ....

நண்பி கண்ணை திற
பேய்யும் இல்லை மண்ணும் இல்லை
இங்க வா என்று கூறுகிறான் என் நண்பன்...

நீ வந்துட்டியா இனி பயம் இல்லை என்று
என் நண்பனை நோக்கி நான்
பயத்தோடு ஓட பவி போகாதே
அது உன் நண்பன் ரூபத்தில் இருக்கும்
பேய் என்றான் உசேன்....

 அடங்க வெங்காயம் ஏன்யா
இப்படி நன்பிய பயம் காட்டறீங்க
என்று கூற இது என் நண்பன் தான்
 வெங்காயத்தை பெரியாருக்கு அடுத்து அதிகம் திட்ட
பயன்படுத்தியது என் நண்பன் தான் ....

பயத்தோடு ஓடி என் நண்பன் பின்னால் நான் பதுங்க
என் கனவு கலைந்து எனக்குள் எழுந்த ஒரே சந்தேகம்
ராம் உசேன் பேட் என்ன ஆகி இருப்பார்கள் ?
Title: Re: பவியின் கிறுக்கல்கள்
Post by: Maran on April 10, 2016, 04:12:57 PM


நான் இரவில் பெரும்பாலும் அவ்வளவு சீக்கிரம் தூங்கிவிடுவது இல்லை, தூக்கம் வரவில்லை என்பதும் காரணம். அப்படி ஒரு நாள் இரவில், ஒரு புல்லாங்குழல் இசை கேட்டது, நான் என் அறையின் பால்கனியில் நின்று பார்த்தேன் யார் என்று தெரியவில்லை.

மறுநாள் காலையில் என் அம்மா இந்த புல்லாங்குழல் நம்ம வீட்டு Compoundஇல் கிடைத்தது என்று வந்து தந்தார். நான் சற்று நேரம் ஆழமாக யோசிக்கத் துடங்கினேன் "யாருடையது? யார் வாசித்தது?" என்று. இந்த சிந்தனையே ஒரு உருவமில்லாத பேயை உருவாக்கிவிட்டது என்பது உண்மைதான். அதன் தொடர்ச்சிதான் உங்கள் கனவு போல...  :)  :)

வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச் லைட் வந்தப்புறம் ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன?!  :)

பவித்ரா சகோதரியே ஒரு பேய்தான்  :) ஒரு பேயே இன்னொரு பேயை பயமுறுத்துமா என்ன!!?  :) அதுதான் பயந்து ஓடும்...  :)  :)  :D

பேய் வருவது இருக்கட்டும்.. நாலு கைகள் இரண்டு மூன்று முகம் கொண்ட கடவுளை பார்க்க நேர்ந்தால் மட்டும் அங்கேயே நின்றுகொண்டு இருப்போமா என்ன?!!

சினிமாவுல இப்ப இருக்குற பேய் trend போல FTC கவிதையில் தொத்திக்கிச்சு போல... வாழ்த்துக்கள் சகோதரி பயப்பிடாதிங்க, பயமுறுத்துங்க...  :)