FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 08, 2016, 12:14:40 PM

Title: சாலை விதிகள்
Post by: thamilan on April 08, 2016, 12:14:40 PM
சாலைப் பயணங்கள்  இப்போதெல்லாம்
மரணத்தை கைபிடித்து நடப்பது போலாயிட்டு 
எமன் வாகன வடிவில் எப்பக்கம் இருந்து வருவானோ
இறைவனே அறியார்
நில் நிதானி செல்
இது சாலையின் விதிமுறை மற்றுமன்று
மனிதவாழ்வின் தத்துவமும் கூட

ஆயிரம் சாலை விதிகள்
பல நூறு  அறிவிப்புப் பலகைகள்
என்ன இருந்தென்ன
விதியை  மிஞ்சி விடுகிறது
விதி முறைகளை மீறும் மனிதனின் அலட்சியம்
 அவசர அவசரமானது தான்
மனித வாழ்க்கை
நிற்பது நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்
மனிதனுக்கு கவனங்களும்
ஒரு நிலையில் இல்லை

மற்றவர் உயிர் தனது காலடியில்
இதை மறந்து
காதில் மைக்ரோ போன்
கவனம் முழுவதும் பேச்சில்
 கண் இமைக்கும் நேரத்தில்
கலைந்து விடுகிறது பலரது உயிர்
கூட வருவவர்களுடன்
பேச்சில் கவனம்
கடவைகளை கவனத்தில் கொள்ளாதது
கணநேரத்தில் கடந்து விடுகிறது
இறைவன்  தந்த உயிர் 

வாகனத்தில் போவோருக்கும்
சாலைகளை கடப்போருக்கும்
தேவை நிதானம்
சாலையில் கவனம்
விதி முறைகளை பின்பற்றும் அறிவு
இவை இருந்தால் நம் உயிரையும் காக்கலாம்
மற்றவர் உயிரையும் பாதுகாக்கலாம்