FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 02, 2016, 09:09:25 PM

Title: ~ பச்சரிசி அடை ~
Post by: MysteRy on April 02, 2016, 09:09:25 PM
பச்சரிசி அடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fadai-2.jpg&hash=38fd451715d5ea9b4abab55fa30c9337f7e2319c)

பச்சரிசி – 1 கப்
உளுந்து- 2 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1/4 கப்
கடலைபருப்பு – 1/4 கப்
வற்றல் மிளகாய் – 5
பெருங்காயம் – 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு

அரிசி, பருப்பு, மிளகாயை 2 மணிநேரம் ஊறவைத்து நறநறவென்று அரைக்கவும்.
அதனுடன் உப்பு,பெருங்காயம், தேங்காய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் காய்ந்ததும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோசைபோல வட்டமாக அடை வார்க்கவும்.
அதன் நடுவே தோசைக்கரண்டியால் சிறிது துளையிட்டு நடுவிலும் ஓரங்களிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டுபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் பரிமாறவும்.