FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 02, 2016, 09:00:38 PM
-
கறிவேப்பிலை தொக்கு
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12928362_1552904671673669_5899176622376871355_n.jpg?oh=5cc2802c3cd1b4586b805ba5946948c1&oe=578CE85D)
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை (உருவியது) – 2 கப்,
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (அரைக்க) – 8 (அல்லது காரத்துக் கேற்ப),
புளி – எலுமிச்சை அளவு,
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2,
பொடித்த வெல்லம் – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* கறிவேப்பிலையை கழுவி, துடைத்து உலரவிடவும்.
* புளியை கால் கப் வெந்நீரில் ஊறவைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொண்டு… கறிவேப்பிலையை அதே எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி எடுக்கவும்.
* வதக்கிய கறிவேப்பிலை, ஊறிய புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த கறிவேப்பிலை விழுது, வெல்லம் சேர்த்து (அடுப்பை `சிம்’மில் வைத்து), 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
* சுவையான சத்தான கறிவேப்பிலை தொக்கு ரெடி.