FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2016, 09:48:43 PM

Title: ~ சீப்பு சீடை ~
Post by: MysteRy on April 01, 2016, 09:48:43 PM
சீப்பு சீடை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2F06-1446809142-seepu-seedai.jpg&hash=0fcd68fba92446b4aff18cb75ae3f603508945bf)

தேவையான பொருட்கள்:

 அரிசி மாவு – 1 கப் உளுத்தம் மாவு – 1/4 கப் கடலை மாவு – 1/4 கப் கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு சுடுநீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!