FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2016, 09:41:33 PM

Title: ~ முட்டை – சப்பாத்தி ரோல் ~
Post by: MysteRy on April 01, 2016, 09:41:33 PM
முட்டை – சப்பாத்தி ரோல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2Fdrew.jpg&hash=c9b2935224efa0a68c894f86ca1b8ee025b76111)

தேவையான பொருட்கள் :

முட்டை – 1
சப்பாத்தி – 6
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
• பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.
• அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும்.
• இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி.
• குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உணவு இது.