FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2016, 09:22:53 PM

Title: ~ ரஸ்க் லட்டு ~
Post by: MysteRy on April 01, 2016, 09:22:53 PM
ரஸ்க் லட்டு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F11%2Fgjjgjgj.jpg&hash=0519d96d0c9f48f9cb41ff748690aa1d691b1bfe)

தேவையான பொருட்கள்:

ரஸ்க் (rusk)– 10
வெல்லம் – ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் – 4
முந்திரி – 4
நெய் – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்

செய்முறை :

• ரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும்.
• ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வெல்லம், தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
• வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை கலந்து வைத்திருக்கும் தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
• ரஸ்கின் உடைத்த நடுப்பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் பொடி செய்த ரஸ்கை போட்டு அதனுடன் தேங்காய் கலவையை போட்டு பிசையவும்.
• பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
• சுவையான எளிமையாக செய்யக்கூடிய ரஸ்க் உருண்டை தயார்