FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 01, 2016, 08:30:37 PM
-
கறிவேப்பிலை உருளை கறி
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/12799238_1551772121786924_8049164001674495789_n.jpg?oh=a5217e8ebd641884bf16bc53b5353cb0&oe=577990B1&__gda__=1467930630_239cc2e23f84a96d4180de6d390e2ecd)
சிறிய உருளைக்கிழங்கு & அரை கிலோ (அல்லது) பெரிய உருளைக்கிழங்கு & அரை கிலோ, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 4&5 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை இலைகள் & அரை கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை மிளகாய் & 4, பூண்டு & 5 பல்.
செய்முறை:
சிறிய உருளைக்கிழங்கு என்றால் வேகவைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள். பெரிய உருளைக்கிழங்கு எனில் தோல் சீவி நறுக்கிக் கொள்ளுங்கள்.
அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து உருளைக்கிழங்கில் பிசறி 1 மணி நேரம் ஊற விடுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து இதனையும் சேர்த்து நடுத்தர தீயில் நன்கு கிளறுங்கள்.உருளைக்கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி இறக்குங்கள்.
சாதத்துக்கு பிரமாதமான சைட் டிஷ்.