FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 31, 2016, 10:08:03 PM

Title: ~ மைக்ரோ வேவ் ஓவனில் கிரில் சிக்கன் ~
Post by: MysteRy on March 31, 2016, 10:08:03 PM
மைக்ரோ வேவ் ஓவனில் கிரில் சிக்கன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2Ffhfhfh-e1443099404314.jpg&hash=b13d8107ffa1d89ed2abff01be7f32f7172d3f3c)

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/2 கிலோ (பெரிய 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு

செய்முறை:

1. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2.மேலே கூறிய பொருட்களை சிக்கனுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3.மைக்ரோ வேவ் ஓவனை 200 டிகிரி c க்கு preheat பண்ணவும்.
4.பின்னர் ஊற வைத்த சிக்கனை எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோ வேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி c யில் 20 நிமிடம் வைக்கவும்.பிறகு அத வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும்.
மிகவும் சுவையான கிரில் சிக்கன் ரெடி. இதற்கு mayonnaise sause மிகவும் ஏற்ற சைடு டிஷ்.