FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 31, 2016, 08:52:30 PM
-
உருளைக்கிழங்கு தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Furu1.jpg&hash=0ef69650862c4a4393794caabdbf3f3067c24dda)
தேவையானவை :
உருளைக்கிழங்கு – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பிறகு அதனை தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தை எடுத்து, உருளைக்கிழங்கு துருவல், மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு போல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவ வேண்டும். பின் கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் சுவையான, சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி!!!
4. இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.