FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 31, 2016, 07:32:01 PM

Title: இன்றைய காதல்
Post by: thamilan on March 31, 2016, 07:32:01 PM
காதல்
காதலுக்காக கட்டப்பட்ட
தாஜ்மகாலைப் போலவே
காதலும் இன்று
கல்லறை ஆகி விட்டது

காதல் ஒரு வகை
உணர்ச்சி தான் - ஆனால்
உணர்வுடன் கலக்காத
எந்த உணர்ச்சியும்
உருவம் பெறுவதில்லை

பலரது காதல் என்ற
உணர்ச்சி
உடம்பில் இருந்தே வருகிறது
உள்ளத்தில் இருந்து வருவதில்லை
அதனால் தான்
இன்றைய காதல்கள்
உடம்புடனேயே முடிந்து போகின்றன

கண்டதும் காதல்
காணாமலும் காதல்
கடிதத்தில் காதல்
வலையதளத்தில் காதல்
காதல் எப்படி வேண்டுமானாலும்
வரட்டும்
அது உள்ளத்தில் இருந்து
உணர்வுகளுடன் கலந்து
உண்மையாக வரட்டும் 
Title: Re: இன்றைய காதல்
Post by: PraBa on March 31, 2016, 08:25:45 PM
சிறப்புமிக்க சிந்தனை
சிந்திக்க வேண்டியதும் கூட...,,