FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 10:12:26 PM
-
கோதுமை ரவை கரட் புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffeww-1-e1458795180765.jpg&hash=aeba80f97d6b7a3678c7ec39dc451938be3ebe3d)
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 1 கப்
கேரட் – 1 கப் துருவியது
தேங்காய் – ½ கப் துருவியது
வெல்லம் – ½ கப் துருவியது
ஏலப்பொடி – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:-
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்.
* பின் அதனுடன் கேரட் துருவலைக் கலந்து உப்புப் போட்டு குக்கரில் அல்லது இட்லி பாத்திரத்தில் வேகவைக்கவும்.
* வெந்ததும் கட்டிகள் இல்லாமல் உதிர்க்கவும்.
* இதில் பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை கேரட் புட்டு ரெடி.