FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 09:44:26 PM
-
கறிவேப்பிலை தோசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FJun%2F34bbd959-e5d7-4438-8b18-31cae2aa0f22_S_secvpf.gif&hash=94da020f118d7db26b6cee8363a8df0775ed2859)
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி – 2 கப்
உளுந்து – அரை கப்
ஓமம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
• அரிசி மற்றும் உளுந்தைக் கழுவி தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊற வையுங்கள்.
• உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு அரைத்து, இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
• கறிவேப்பிலையை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கறிவேப்பிலை, ஓமம் இரண்டையும் சிறிது வறுத்து ஆறியதும் மைய அரைத்து மாவோடு கலந்து கொள்ளுங்கள்.
• இந்த மாவுக் கலவையை எட்டு முதல் பத்து மணி நேரம் மூடி புளி விடுங்கள்.
• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி தோசையாக வார்த்து, அதனை ஒரு மூடியால் மூடி இரண்டு முதல் மூன்று நிமிட நேரம் வேக விடுங்கள். இந்த தோசையை மறுபுறம் திருப்பி வேக வைக்க வேண்டும் என்பதில்லை.
• தக்காளி சட்னியோடு பரிமாறுங்கள்.