FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 09:39:16 PM
-
வல்லாரை சம்பல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FJun%2Fcd3a7ced-6755-48fd-afe6-1c828bb54549_S_secvpf.gif&hash=a9ab855a44beb956a6c09fb1c5d9a0e34632bc67)
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை – 1 கட்டு
தக்காளி – 1
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
• வல்லாரை இலையை காம்பில் இருந்து கிள்ளி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை சிறிதாக அரிந்து எடுத்துக்கொள்ளுங்க.
• ஒரு பாத்திரத்தில் வல்லாரை கீரை, வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
• நன்றாக கலக்கியதும் சுவையை பார்த்து ஒரு அழகான சிறிய பாத்திரத்தில் இட்டு பரிமாறவும்.
• சுவையான வல்லாரை கீரை சாலட் ரெடி.