FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 09:28:47 PM
-
இஞ்சி சாதம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FJun%2F469873a2-045b-454f-b68e-f6c76914c782_S_secvpf.gif&hash=57e136bc83e339cd081ea781f6dbe148ab04c63f)
தேவையான பொருட்கள் :
அரிசி – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – ஒரு சிறு துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
கொத்தமல்லித் தழை
புதினா
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
அரைக்க:
இஞ்சி – ஒரு சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 3
பூண்டு – 5 பல்
பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
முந்திரி – 5
செய்முறை :
• வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
• தக்காளியைத் தனியாக அரைத்து வைக்கவும்.
• குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
• பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
• அத்துடன் இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
• கழுவிய அரிசியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.
• சுவையான சத்தான இஞ்சி சாதம் ரெடி.
• சளி, இருமல் போன்ற சமயங்களில் இந்த சாதத்தை செய்து சாப்பிடலாம்.