FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on January 19, 2012, 05:05:47 PM

Title: சொர்க்கம் நரகம்
Post by: ஸ்ருதி on January 19, 2012, 05:05:47 PM
படைத் தளபதி ஒருவன் ஜென் ஞானி ஒருவரிடம்,”அய்யா,எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்.உண்மையில் சொர்க்கம் நரகம் இருக்கிறதா?”என்று கேட்டான்.

ஞானி அவனை ஏறெடுத்துப்  பார்த்து,”நீ யார்?”என்று கேட்க,தான் ஒரு படைத்தளபதி என்று கூறினான்.உடனே ஞானி,”நீ ஒரு முட்டாள்.நீயெல்லாம் படைத் தளபதியாய் இருப்பதற்குத் தகுதி அற்றவன்.”என்று கூறினார்.

தளபதிக்கு பயங்கரமான கோபம்.உடனே வாளைஉருவினான்.ஞானி சிரித்துக்கொண்டே,”இதோ நரகத்தின் வாசல் திறந்து விட்டது,”என்றார்.அதிர்ச்சி அடைந்த தளபதி வாளை உரையிலிட்டவாறே ,”அய்யா,என்னை மன்னிக்க வேண்டும்.”என்றான். ஞானி,”இப்போது சொர்க்கத்தின்  வாசல்  திறந்து  விட்டது.”என்றார்.

சந்தேகம் தீர்ந்த தளபதி ஞானியை வணங்கி விடை பெற்றான்.