FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 30, 2016, 09:09:45 PM
-
அரைக்கீரை பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2FCapture1.png&hash=68c7fa253cf8cd26a4f7ec8bdf51b629cd3c4cea)
அரைக்கீரை – 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது),
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – தேவையான அளவு,
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
முதலில் துவரம்பருப்பை ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் ஊற வைத்த துவரம்பருப்பை அதில் போட்டு சிறிதுநேரம் வதக்கவும். பின் இவற்றில் கீரையை போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பின்பு அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, மூடி வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்து தண்ணீர் வற்றிய பின், அதில் தேங்காயை சேர்த்து கிளறி, சீரகப் பொடி மற்றும் பூண்டை தட்டி போட்டு கிளறி இறக்கினால், அரைக்கீரை பொரியல் ரெடி!!!