FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 29, 2016, 09:39:11 PM
-
பூசணிக்காய் மோர்க்கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fpusa.jpg&hash=2c546c71d49b28536ce39aca587d24c061cdac03)
தேவையானவை:
பூசணிக்காய் – 200 கிராம், தேங்காய்த் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, தேங்காய் எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தயிர் – 100 மி.லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூசணிக்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை அரைத்து, தயிரில் கலந்து, வேகவைத்த பூசணிக்காயுடன் சேர்த்துக் கலக்கவும். எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, கூட்டில் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
குறிப்பு:
குளிர்ச்சி தரும் காய்களில் ஒன்று பூசணி. பூசணிக்காயை அரைத்து ஜூஸாக்கி, தயிர் கலந்து, உப்பு போட்டுக் குடித்தால், உடல் சூடு தணியும்.
பலன்கள்: இதில், ப்ரோபயோடிக் அதிகம், நல்ல பாக்டீரியாவை வளரச்செய்யும். தாது உப்புக்கள், நீர்ச்சத்து பூசணியில் அதிகம். உடல் மெலிந்தவர்கள், அசிடிட்டி, எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சி, கணைய நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்ல ரெசிப்பி. இதய நோயாளிகள் தேங்காய்க்குப் பதிலாக, பொட்டுக்கடலை மாவை வறுத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.