FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 29, 2016, 09:32:47 PM
-
பூண்டு பன்னீர் ஃப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fva-1.jpg&hash=cedb75e346ea468a7c9dfefa8d9b46d71822c2ba)
தேவையான பொருட்கள்
பன்னீர் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 3 தேகரண்டி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கஸ்துரி மேத்தி – அரை டீஸ்பூன்
பூண்டு – 15 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி , பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
மல்லித்தளை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், கஸ்துரி மேத்தி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.
பின், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், குடை மிளகாய், தக்காளி, உப்பு, சில்லி பவுடர், சீரக தூள் ஆகிவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.பின், பன்னீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு, எலுமிச்சை பழம் சாறு சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.