FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 28, 2016, 11:10:16 PM

Title: தாலி எனும் வேலி
Post by: thamilan on March 28, 2016, 11:10:16 PM
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும்
திருமணம் என்பது ஒரு
பரீட்சை
அவளாக எழுதும்
பரீட்சையல்ல - இது
ஆண்டவன் எழுதும்
புதுப் பரீட்சை

பூவாய் மணக்கும் சிலர் வாழ்வில்
நாராய் கிழிக்கும்
பலர் வாழ்வில்
காப்பா சிறையா புரிவதில்லை
காலம் போடும் கணக்குகள்
காலன் வரும் வரை புரிவதில்லை

கழுத்தில் கட்டிய தாலி
சிலருக்கு
இதயத்தை கிழிக்கும் வேலி
வலியை நினைத்து
விலகுவதா இல்லை
வடுவோடு வாழ்வதா
புரியாத விடுகதை இது

ஆணாதிக்க ஆண்கள்
ஆனாலும் இவளை சக்தி என்பர்
ஆண்டவன் கோர்டில் அழலாம் என்றால்
குற்றவாளியே நீதிபதி
Title: Re: வேலி எனும் தாலி
Post by: SweeTie on March 29, 2016, 01:57:25 AM
இதயத்தைக் கிழிக்கும் வேலியின் வலி வேண்டாம் என்று  பெண்கள் 
வேலியை உடைத்தெறிந்து  வெளியே  வந்து பலகாலம் ஆயிற்றே.
கவிதைக்கு வாழ்த்துக்கள்