FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 27, 2016, 08:48:01 PM
-
தேங்காய் – மாங்காய் – சோள சுண்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fman-1.jpg&hash=b85f42b82ce6e1736239344acd029b6283ea97e7)
தேவையானவை:
முற்றிய தேங்காய் – முக்கால் மூடி
அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) – ஒன்று
அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் – முக்கால் கப்
வெள்ளை மிளகுத்தூள்
சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு சிட்டிகை
நறுக்கிய வெள்ளரிக்காய் – கால் கப்
எலுமிச்சை பழம் – அரை மூடி
நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து… உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.
மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.